NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரமழான் மாதத்திற்கான விடுமுறை தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியீடு..!

ரமழான் காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொழுகையிலும் மதவழிபாடுகளிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் ரமழான் மாதத்திற்கான விசேட விடுமுறை தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்களுக்கு குறித்த சுற்றறிக்கையை அமைச்சு அனுப்பியுள்ளது.

ரமழான் மாதம், எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி ஆரம்பமாகி மார்ச் 30 ஆம் திகதி முடிவடையவுள்ளதால், இந்த காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகையிலும் மதவழிபாடுகளிலும் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அதன்படி, முற்பகல் 3.30 முதல் முற்பகல 6 மணி வரையும், புpற்பகல் 03.15 முதல் புpற்பகல் 04.15 வரையும், புpற்பகல் 6 மணி முதல் புpற்பகல் 7 மணி வரையும், புpற்பகல் 07.30 முதல் புpற்பகல் 10.30 வரையும் தொழுகைகளும் மதவழிபாடுகளும் நாளாந்தம் நிகழும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் உத்தியோகத்தர்கள் சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடியதாக வேலை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும் எனவும், மேலும், தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் விசேட விடுமுறைகளுக்கு அனுமதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ரமழான் பெருநாளில் இறுதித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாக அரச சேவை கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் ஆகியவற்றில் கடமையாற்றும் தகைமையுடைய முஸ்லிம் உத்தயோகத்தர்களுக்கு விழா முற்பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles