ரஷ்யாவின் வடக்கு ககாசஸின் தாகெஸ்தான் பகுதியிலுள்ள தேவாலயங்களில் கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அருட்தந்தை, பொலிஸார் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
அதில் தாக்குதல் மேற்கொண்டவர்களை நோக்கி பொலிஸார் நடத்திய துப்பாக்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் யாரென்பதை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று திங்கட்கிழமையன்று தாகெஸ்தான் பகுதியிலுள்ள ஒரு தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுள்ளது.
ஆராதனையில் ஈடுபட்ட பலர் அங்கு கூடியிருந்த வேளையில் திடீரென தேவாலயத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் அங்கிருந்த மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பயங்கரவாதிகள், தேவாலய அருட்தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளனர். இதனை தடுக்க முயன்ற தேவாலய பாதுகாவலர்களையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அதேசமயம் அங்குள்ள இன்னும் சில தேவாலயங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் தாக்குதல்களை நடத்தி தீ வைத்துள்ளனர்.
இதில் தேவாலயங்கள் கொழுந்து விட்டு எரிந்துள்ளன. இந்த சம்பவத்தினால் பொலிஸ் அதிகாரிகள் முதற்கொண்டு சுமார் 20 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் இராணுவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் துக்க தினம் அனுசரிக்கப்படும் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.