(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கருங்கடல் வழியாக தானிய போக்குவரத்துக்கு ரஷ்யா அனுமதிக்காதமையால் உலகில் கோதுமை மாவின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரஷ்யாவில் இந்த முடிவின் மூலம் எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யுக்ரைனுடனான ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் வழியாக தானியங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. யுக்ரைனும் ரஷ்யாவும் உலகின் இரண்டு பெரிய தானிய உற்பத்தி நாடுகளாக அறியப்படுகின்றன.
இருப்பினும், தானியக் கப்பல்களைத் தவிர பயணிகள் கப்பல்கள் கருங்கடல் வழியாக செல்ல ரஷ்யா அனுமதிக்காது என பிரித்தானியா குற்றம் சாட்டியது.
பயணிகள் கப்பல்களை வெடிக்கச் செய்யக் கூடிய கடல் குண்டுகளை கருங்கடலில் ரஷ்யா சேர்த்துள்ளதாக பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.