NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரஷ்யாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.

இதில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த காட்டுத்தீயினால் ரஷ்யாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்களுக்குள்ளும் தீ பரவியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதனால் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில் அவசர நிலை உத்தரவை பிறப்பித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

Share:

Related Articles