இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு T-20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணி வெளியேறிய பிறகு அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். அதன்பின், அவரது பயிற்சியின்கீழ் இந்திய அணி கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுள்ளது.
இருப்பினும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கிண்ணம் போன்ற ஐசிசி தொடர்களில் இந்திய அணி கிண்ணத்தைக் கைப்பற்ற முடியவில்லை.
இதற்கிடையே, உலகக் கிண்ண ஒருநாள் தொடருடன் இந்திய அணியில் தலைமைப் பயிற்சியாளருக்கான இரண்டு ஆண்டு ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அவரின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய கிரிக்கெட் அகடமியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மனும் தொடர்வார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியுடன் ராகுல் டிராவிட்டும் பயணிக்கவுள்ளார்.