NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரூ.85000க்கு விற்பனையான மாம்பழம் – வவுனியாவில் சம்பவம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வவுனியா – தவசிகுளம் ஸ்ரீ விநாயகர் ஆலய வருடாந்த காணிக்கை ஏலத்தில் மாம்பழம் ஒன்று 85,000 ரூபாவிற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் மாம்பழத்தை வாங்கியதாக ஸ்ரீ விநாயகர் கோயில் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

இந்நாட்களில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் வருடாந்த பூஜைகள் நடைபெறுவதுடன் இடையில் ஏலமும் இடம்பெறும்.

முன்னதாக வவுனியா மாவட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் பூஜை பானை ஒன்று 10 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

Share:

Related Articles