ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் இன்று முதல் உப்பு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, பொதியிடப்பட்ட 400 கிராம் உப்பு தூளின் விலை 100 ரூபாவிலிருந்து 120 ரூபாவாகவும், பொதியிடப்பட்ட ஒரு கிலோ உப்பு கட்டியின் விலை 120 ரூபாவிலிருந்து 180 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் என ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் வு.நந்தன திலக தெரிவித்துள்ளார்.
உப்பு விலை அதிகரிப்பானது தற்காலிக தீர்மானம் என தெரிவித்த அவர், மார்ச் மாதம் ஹம்பாந்தோட்டை உப்பளத்தில் உப்பு உற்பத்தி கிடைத்தவுடன் உப்பு விலை குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்வதனாலேயே உப்பின் விற்பனை விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.