NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 204 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 2982 ரூபாவாகும்.

இதேவேளை 5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,198 ரூபாவாகும்.

மேலும் 2.3 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 37 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 567 ரூபாவாகும்.

Share:

Related Articles