NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லிந்துலையில் தொடர் குடியிருப்பில் தீப்பரவல் – 10 வீடுகள் முற்றாக தீக்கிரை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

லிந்துலை – பெரிய ராணிவத்தை தோட்ட தொடர் குடியிருப்பில் நேற்று (25) இரவு ஏற்பட்ட தீ பரவலினால் 10 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

பெரிய ராணிவத்தை தோட்டத்தின் முதலாம் தொடர் குடியிருப்பிலுள்ள, 24 லயன் அறைகளை கொண்ட பகுதியில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படாத போதிலும் அத்தியாவசிய ஆவணங்கள், தளபாடங்கள் மற்றும் உடைமைகள் என்பன முற்றாக தேசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 10 குடும்பங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.

மேலும், தீப்பரவல் மின் கசிவு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என லிந்துலை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles