இலங்கை பத்திரிகை வரலாற்றில் மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் லைக்கா குழுமத்தின் ஊடக வலையமைப்பின் கீழ் ஒருவன் தேசிய பத்திரிகை இன்று முதல் நாடளாவிய ரீதியில் வெளியாகிறது.
அரசியல், விளையாட்டு, சினிமா, சர்வதேசம் உள்ளிட்ட செய்திகளோடு உள்நாட்டு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை உள்ளடக்கி வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட சகலரதும் பிரச்சினைகளை வெளிக்கொணரும் நோக்கில் உருவாகும் ஒருவன் பத்திரிகை இன்று முதல் மக்கள் கைகளில் வலம் வரவுள்ளது.
இலங்கை பத்திரிகை துறையில் பேர் பெற்ற சிரோஷ்ட பிரதம பத்திரிகை ஆசிரியர் நா.வித்தியாதரனின் மேற்பார்வையின் கீழ் இன்று முதல் ஒருவன் பத்திரிகை நாடளாவிய ரீதியில் வெளியாகிறது.
இலங்கையில், சுவர்ணவாஹினி மற்றும் மொனரா தொலைகாட்சிகளை தொடர்ந்து, 4 தொலைகாட்சி ஊடகங்களையும், 7 வானொலி ஊடகங்களையும், 3 டிஜிட்டல் ஊடகங்களையும் கொண்ட லைக்கா குழுமத்துக்கு சொந்தமாக, ஒருவன் தேசிய பத்திரிகையும் மற்றுமொரு புதிய ஊடாகமாக இன்று முதல் இணைந்துள்ளது.
லைக்கா குழுமத்தின் தலைவர் திரு.அல்லிராஜா சுபாஸ்கரனின் தீர்மானத்துக்கு அமைய, ஒருவன் தேசிய பத்திரிகை இன்று முதல் இலங்கையில் தடம் பதிக்கிறது.