NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லைக்கா புரொடக்‌ஷனின் சமீபத்திய படமான இந்தியன் – 2 இன்று வெளியானது!

உலகின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்‌ஷன் அதன் சமீபத்திய படமான இந்தியன் – 2ஐ இன்று வெளியிட்டது.

இது இலங்கை, இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் உட்பட உலகெங்கிலும் உள்ள நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது.

இந்தியன் – 2 என்பது இலங்கையில் பிறந்த பிரபல தொழில்முனைவோரும் லைக்கா குழுமத்தின் நிறுவனருமான கலாநிதி திரு.அல்லிராஜா சுபாஸ்கரனின் சமீபத்திய திரைப்படத் தயாரிப்பாகும்.

லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பில் இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் வெளியான இந்தியன் – 2 திரைப்படத்தில், உலகநாயகன் கமல் ஹாசன், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத், சித்தார்த் சூர்யநாராயணன் ஆகிய திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.

பொன்னியன் செல்வன், கத்தி, 2.0, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, யமன், தியா, பன்னிக்குட்டி, நாய் சேகர் ரிட்டன், சந்திரமுகி – 2 போன்ற திரைப்படங்களை இரசிகர்களுக்கு வழங்கியதன் மூலம் கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் திரையுலகில் முத்திரையைப் பதித்தார். அந்தவகையில், உலகெங்கிலும் உள்ள தனது இரசிகர்களுக்கு இந்தியன் – 2வையும் இன்று வழங்கியுள்ளார்.

வரலாறு நெடுகிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெரும் பொருட்செலவில் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களைத் தயாரித்த ஒரே இலங்கையர் என்ற பெருமையுடன், லைக்கா குழுமத்தின் ஸ்தாபகரும் எமது ஊடக வலையமைப்பின் கௌரவ தலைவருமான கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களை நினைவுகூருகிறோம்.

Share:

Related Articles