NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் – விசாரணை தீர்ப்பு ஒத்திவைப்பு!

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் தொடர்பிலான மரண விசாரணை தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் திகதி உயிரிழந்தார்.

இது தொடர்பிலான வழக்கு விசாரணை யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன.

தெல்லிப்பழை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மற்றும் , யாழ்.போதனா வைத்தியசாலையில் இளைஞனை அனுமதித்து சிகிச்சை வழங்கிய வைத்திய அறிக்கையையும் மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்.நீதிமன்ற பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மரண விசாரணை தொடர்பிலான தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி வழங்கப்படும் என தெரிவித்த நீதவான் அன்றைய தினத்திற்கு வழக்கினை ஒத்திவைத்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles