NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வரலாறு காணாத அளவில் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலகில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில், பணக்காரர்கள் எண்ணிக்கை, வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1997ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் ஆய்வுக்குப் பிறகு நடத்தப்பட்ட தற்போதைய ஆய்வில் , பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 4.7 சதவிகிதம் உயர்ந்து, 86.8 டிரில்லியன் ஆகியுள்ளதாக, World Wealth Report என்னும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜேர்மனியில் பொருளாதார வளர்ச்சி வீதம் சராசரிக்குக் கீழே இருந்தும், பணக்காரர்களின் சொத்து 2.2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது., இதன் மதிப்பு 6.28 ட்ரில்லியன் டொலர்களாகும்.

7.431 மில்லியன் டொலர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 3.777 மில்லியன் டொலர்களுடன் ஜப்பான் இரண்டாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles