(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை தொடர்ந்து இன்று வைகாசி பொங்கல் உற்சவம் ஆரம்பமாகியுள்ளது.
முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் அதிகாலை வழிபாடுகளை தொடர்ந்து, வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி விசாகப்பொங்கல் சடங்கு பற்றி கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த குடியானவர்களுக்கு மரவு வழியாக அறிவிக்கும் பொங்கலின் ஓர் ஆரம்ப சடங்கே இந்த பாக்குத்தெண்டல் உற்சவமாகும்.
கண்ணகி தெய்வத்தின் பக்தனாகிய பக்தஞானி தென்னிந்தியாவில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கிராமத்தில் தங்கியிருந்த காலத்தில் வற்றாப்பளை பொங்கல் சடங்குகளை ஓர் சீர்வரிசைப்படுத்துவதற்காக பாக்குத்தெண்டல் தொடக்கம் சிலாவத்தை தீர்த்தக்கரையில் தீர்த்தம் எடுத்தல் காட்டு விநாயகர் ஆலயத்தில் தீபமேற்றுதல் போன்ற பல சடங்குகளை அருளி நின்றார் என்பது ஐதீகமாகும்.
இந்த சம்பிரதாய நிகழ்வோடு ஆரம்பமாகும் உற்சவம் வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி விசாக பொங்கலுடன் நிறைவடையும்.