NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தரவரிசையை நெருங்கும் ஜெய்ஸ்வால்!

இந்திய அணியின் இளம் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது டெஸ்ட் வாழ்க்கையின் நம்பமுடியாத உயர்வைப் பெற்றுள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்துப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் 700 ஓட்டங்களுக்கு மேல் குவித்த இரண்டாவது இந்திய துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அந்தத் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக 26 சிக்ஸர்களை விளாசினார். அவரது 26 சிக்ஸர்கள் இப்போது ஒரு துடுப்பாட்ட வீரரின் டெஸ்ட் தொடரில் அதிகபட்ச சிக்ஸர்களாக உள்ளது.

2019 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் ரோஹித் சர்மா அடித்த 19 சிக்ஸர்கள் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.

இரண்டு இரட்டைச் சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்களுடன் 89 சராசரியுடன் 712 ஓட்டங்களை அவர் குவித்திருந்தார்.

ஒன்பது டெஸ்ட் போட்டிகள் கொண்ட தனது டெஸ்ட் வாழ்க்கையில் இப்போது இளம் வீரர் 1028 ஓட்டங்களை குவித்துள்ளார். அதில் இரண்டு இரட்டை சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்கள் அடங்கும்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது 740 மதிப்பீட்டு புள்ளிகளை பெற்றுள்ளார்.

ஐசிசி பதிவுகளில், டொன் பிராட்மேன் (752) மற்றும் மைக் ஹஸ்ஸி (741) ஆகிய இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் மட்டுமே அதிக மதிப்பீட்டைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை, இங்கிலாந்துக்கு எதிராக 712 ஓட்டங்களை குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles