(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இவ்வருடம் தொடக்கத்தில் இருந்து இதுவரை 1192 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வருட தொடக்கத்தில் இருந்து ஜூலை 9ஆம் திகதி வரையிலான காலக்கட்டத்தில்தான் வாகன சாரதிகள் செய்யும் தவறுகளால் வீதி விபத்துகளில் சிக்கி இத்தனை பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மிகக் குறுகிய வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துவதனால் அண்மைய நாட்களில் பல விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காத காரணத்தினால் மேலும் பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தனியார் மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்தால் ஆண்டுதோறும் வீதி விபத்துகள் மற்றும் வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.