(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
திருகோணமலையில் இருந்து 800 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவைச் சூழவுள்ள கடற்பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மோகா புயலாக உருவாகி இன்று (12) மாலை மிகவும் தீவிரமான சூறாவளியாக உருவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது நாளை (14) பிற்பகலில் தென்கிழக்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியான்மரின் கரையோரத்தை கடக்கப் போகிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையில் இது கடந்து செல்வதால் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் சில இடங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.