தாய்வானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து, உலகின் மிகப் பெரிய சிப்மேக்கர் தனது செயற்பாடுகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்வான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம், டிஎஸ்எம்சி(TSMC) என்றும் அழைக்கப்படும் முன்னணி சிப்மேக்கர், தீவின் எதிர் பக்கத்தில் பெரும்பாலும் இயங்குகின்றன.
தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சில உற்பத்தி ஆலைகளை TSMC தற்காலிகமாக வெளியேற்றியதுடன் ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் பணியிடங்களுக்குத் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலநடுக்கத்தால் நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கருவிகள் சேதமடைந்ததுடன் அவை நிறுவனத்தின் செயல்பாடுகளை ஓரளவு பாதித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், TSMC தனது செயற்பாடுகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.