NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வவுனியா சிறைச்சாலையின் தற்காலிக நடமாட்டத் தடை நீக்கம் !

தொற்றுநோய் நிலைமை காரணமாக வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த நடமாட்டத் தடைகள் இன்று (07ஆம் திகதி) முதல் நீக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா தடுப்புச் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கும் சிறை அதிகாரி ஒருவருக்கும் தட்டம்மை நோய் பரவியதையடுத்துஇ நோய் பரவலைக் குறைக்கும் நோக்கில் உடனடி நடவடிக்கையாக கடந்த 25ஆம் திகதி நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதன்படி இன்று (07ஆம் திகதி) முதல் கைதிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் அன்றாட நடவடிக்கைகளை வழமை போன்று மேற்கொள்ளுமாறு பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வைத்தியரால் வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles