வவுனியாவில் எலிக்காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் உரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் நேற்று (31) மேலதிக சிகிச்கைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
செட்டிகுளம், முகத்தான்குளத்தை சேர்ந்த 22 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞனை செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் குறித்த இளைஞன் எலிக்காய்சல் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.