2025 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 713 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த உயிரிழப்புக்கள், 685 விபத்துக்களில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 31 வாகன விபத்துக்கள் குறைவாகப் பதிவாகியுள்ளன.
இதற்கமைய கடந்த ஆண்டில் குறித்த காலப்பகுதிக்குள், 713 வாகன விபத்துக்களில் 744 பேர் உயிரிழந்தனர்.
பண்டிகைக் காலத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.