NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம் – அமைச்சர் விஜித ஹேரத்

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் சரியான முறைமை தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles