NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாக்களிப்பு நிலையங்களுக்கான தூரத்திற்கு அமைய ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும்..!

நாளை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ள தூரத்திற்கு அமைய ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குமாறு அனைத்து தனியார் சேவை வழங்குநர்களிடமும் தொழில் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தொழிலாளர் திணைக்களம் ஆகியன ஏற்கனவே அறிவித்துள்ளதாகத் தொழில் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பணியிடத்திலிருந்து 40 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான தொலைவில் வாக்களிப்பு நிலையம் அமைந்திருந்தால் அரைநாள் விடுமுறையும், 40 முதல் 100 கிலோமீட்டர் தொலைவில் வாக்களிப்பு நிலையம் அமைந்திருந்தால் ஒருநாள் விடுமுறையும் அளிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடத்திலிருந்து வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்ல 100 முதல் 150 கிலோமீட்டர் தூரம் காணப்படுமாயின் ஒன்றரை நாள் விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சின் வலியுறுத்தியுள்ளார்.

150 கிலோமீட்டருக்கு அதிக தூரமாயின் 2 நாட்கள் விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்காக பணியிடத்திலிருந்து வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்வதற்கு சம்பளத்துடன் கூடிய விசேட விடுமுறை வழங்கவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles