நாட்டில் பல பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் அவ்வப்பொழுது கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மறுஅறிவிப்பு வரும் வரை கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென கடல் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் 2.5-3.0 மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதன் காரணமாக கற்பிட்டி, கொழும்பு, காலி முதல் மாத்தறை வரை கடல் அலைகள் நிலத்தை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
மீனவ மற்றும் கடல்சார் சமூகம் இது தொடர்பில் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.