NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வானில் இருந்து விழுந்த விண்வெளிப்பாறைகள் !

தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்த பெண் மீது கூழாங்கல் போன்ற மர்மமான பொருளொன்று அவரது விலா எலும்பில் விழுந்துள்ளது. குறித்த கல் விண்கற்களாக இருக்குமோ என பலரும் தற்போது சந்தேகித்து வருகின்றனர்.

எங்களது அடுத்த வீட்டின் மாடியிலிருந்து பெரிய சத்தம் கேட்டது போல் இருந்தது. அடுத்த நொடியே என்னுடைய விலா எலும்பில் வலியை உணர்ந்தேன். ஏதோவொரு விலங்கு அல்லது வௌவால் என்னை கடித்துவிட்டது என்றே முதலில் நினைத்தேன்’ என பாதிக்கப்பட்ட பெண்மணி தெரிவித்துள்ளார்.

தன்னை தாக்கியது எது என தெரிந்துகொள்ள அந்தக் கற்களை எடுத்துக் கொண்டு உள்ளூரில் உள்ள கூரை வேய்பவரிடம் முதலில் அவர் சென்றிருக்கிறார். அவர் பார்த்துவிட்டு, ‘ஓடுகளுக்கு பயன்படுத்தும் சிமெண்ட் கல் என்றே முதலில் நாங்கள் நினைத்தோம். ஆனால் அது எந்த நிறமும் இல்லாமல் இருந்தது. நிச்சயம் இது விண்கற்களாக தான் இருக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து புவியியலாளரான டாக்டர்.தியரி ரெப்மேன் இந்தக் கல்லை பரிசோதித்து பார்த்துவிட்டுஇ ‘இது வேற்றுலகத்திலிருந்து தான் வந்திருக்கிறது’ என உறுதி செய்துள்ளார். இந்தக் கல்லில் இரும்பும் சிலிக்கானும் கலந்துள்ளது. ஆகவே இது விண்கல்லாக இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகளவில் உள்ளதாகவும் ரெப்மேன் பத்திரிக்கைகளிடம் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட அத்தனை விண்கல்லும் 100 கிராமுக்கும் அதிகமாக எடை கொண்டவை. இதுபோன்ற கற்கள் மனிதர்களை தாக்குவது என்பது மிகவும் அரிதாக நடக்கக்கூடிய விஷயம். இந்த விண்கற்கள் ‘வான்வெளி பாறைகள்’ என அழைக்கப்படுகின்றன. இவை பூமியின் வளி மண்டலத்தில் சுற்றி திரிந்துவிட்டு தரையில் விழுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றனமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles