கதிர்காமம் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செல்ல கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.
செல்ல கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 39 வயதான எச்.கே. பிரசன்ன குமார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
குறித்த கொலையுடன் செல்ல கதிர்காமம் பிரதேசத்தில் வசிக்கும் 5 பேர் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கொலையாளிகள் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.