இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விண்வெளியில் நடக்கவிருக்கிறாா்.
இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸும் மற்றொரு விண்வெளி வீரரான நிக் ஹேகும் வரும் 19 ஆம் திகதி விண்வெளியில் நடக்கவிருக்கிறாா்கள். அந்த நிலையத்தின் நியூட்ரான் நட்சத்திர ஆயுவுக்கான எக்ஸ்-ரே தொலைநோக்கியில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்வதற்காக அவா்கள் வெளியே வருகிறாா்கள்.
இதுதவிர, அடுத்த சில வாரங்களில் விண்வெளியில் நடந்து மேற்கொள்ளப்படவிருக்கும் மற்றொரு பணியிலும் சுனிதா வில்லியம்ஸ் பங்கேற்கிறாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.