கடந்த கால IPL ஏலங்களை போல அல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2024ஆம் ஆண்டுக்கான IPL ஏலத்தில் வித்தியாசமான அணுகுமுறையை பயன்படுத்தி நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை வாங்கியுள்ளது.
கடந்த கால IPL ஏலங்களில் CSK அணியானது தொடக்கத்தில் வீரர்களை ஏலம் எடுக்காது இறுதியில் அனுபவம் வாய்ந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கும் அணுகுமுறையை பயன்படுத்தி வந்தது.
இந்த காரணத்தினால் CSK அணி இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
ஆனால் இந்த முறை இளம் வீரர்கள் மற்றும் உலகக்கோப்பையில் பிரகாசித்த வீரர்களை குறிவைத்து ஏலத்தில் ஈடுபட்டு வருவதோடு ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது CSK அணி.
குறிப்பாக நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடி இந்திய ரூபாய்க்கு முறையான திட்டத்துடன் CSK அணி வாங்கியுள்ளது.
தொடர்ந்து, கடந்த உலகக்கோப்பையில் சிறப்பாக செயற்பட்ட டிராவிஸ் ஹெட்டை வாங்குவதற்காக சன்ரைஷர்ஸ் அணியுடன் ஆறரை கோடி வரை CSK அணி போட்டி போட்டுள்ளது.
CSK அணியின் இந்த திடீர் அணுகுமுறை மாற்றத்துக்கு காரணமாக கடந்த வருடத்தில் அந்த அணி வீரர்களின் ஓய்வு மற்றும் இந்த வருடம் தொடரவிருக்கும் ஓய்வுகள் ஆகியவை குறிப்பிடப்படுகின்றது.
மேலும், 2024ஆம் ஆண்டு IPL தொடருக்கான ஏலம் தற்போது டுபாயில் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.