NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விமானத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற பொதியில் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்றின் சோதனையின் போது 600 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொதியை எடுத்துச் செல்ல வந்த நபர் ஒருவரை சுங்க அதிகாரிகள் உரிய சோதனையை மேற்கொண்டு கைது செய்துள்ளனர்.

போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Share:

Related Articles