NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வியட்நாமில் உலகத் தமிழர் மாநாடு 2025..!

பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் வியட்நாம் தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து “வியட்நாம் உலகத் தமிழர் மாநாடு 2025” ஐ எதிர்வரும் பெப்ரவரி 21,22 ஆகிய திகதிகளில் வியட்நாம் டனாங் நகரத்தில் நடாத்தவுள்ளதாக பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் க. திருதணிகாசலம் தெரிவித்தார்.

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு பொரள்ளை என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,உலக தமிழர் சமூகத்தின் பெருமை மற்றும் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துரைக்கும் மிகப்பெரிய நிகழ்வு இதுவாகும்.
உலக தமிழர் மாநாடு மற்றும் உலக தமிழர் வர்த்தக மாநாடானது 2025 பிப்ரவரி 21 மற்றும் 22 தேதிகளில், வியட்நாம், டா நாங் நகரத்தில் நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, மலேசியா, கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த பல அறிஞர் பெருமக்களும் வருகை தரவுள்ளனர். இதனால் தமிழர் பெருமை முழு உலகமும் வியாபிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles