NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விராட் கோலிக்கு மணல் சிற்பம் உருவாக்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்!

விராட் கோலி பிறந்தநாளுக்கு ஒடிஸா கலைஞர் ஒருவர் மணல் சிற்பம் உருவாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான விராட் கோலி இன்று அவரது 36-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

அவருக்கு இரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இந்திய கிரிக்கெட் வாரியம் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அதன் தொடர்ச்சியாக ஒடிஸாவைச் சேர்ந்த மிகவும் பிரபலமான மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் என்பவர் ஒடிஸாவின் புரி கடற்கரை மணலில் விராட் கோலியில் சிற்பத்தை வடிவமைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுதர்சன் பட்நாயக் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துகள் விராட்கோலி! உங்களது ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவை பல இலட்சக்கணக்கானவர்களை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன. மேலும் இந்த ஆண்டு வெற்றி மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles