(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கொழும்பில் நடைபெறவுள்ள விளையாட்டுத்துறையில் ஊக்கமருந்து பாவனையை எதிர்க்கும் 18ஆவது ஆசிய சமுத்திர வலய அரசாங்கங்களின் அமைச்சர்கள் கூட்டத்தின் மூலம் இலங்கைக்கு 4 கோடி ரூபா வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையைத் தடுக்கும் உலக முகவர் நிறுவனத்துடன்இணைந்து இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சு, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான இலங்கை முகவர் நிலையம் என்பன இந்தக் கூட்டத்தை கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டேலில் எதிர்வரும் 10ஆம், 11ஆம் திகதிகளில் நடத்தவுள்ளன.
தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையை முற்றாக ஒழிக்கும் கொள்கைத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
‘இத்தகைய கூட்டம் ஒன்றை இங்கு நடத்துவது இலங்கைக்கு பெருமை தருகிறது’ என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.