நெதர்லாந்தில் இடம்பெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் நான்காவது சுற்றில் நடப்பு உலக சம்பியனை வீழ்த்தியன் ஊடாக பிரக்ஞானந்தா இந்தியாவின் முதல் நிலை வீரராக உயர்ந்துள்ளார்.
சீனாவின் நடப்பு உலக சம்பியனான டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம் இந்திய சதுரங்க வீரர்கள் தரவரிசையில் முன்னிலை வீரரான விஸ்வநாதன் ஆனந்தைப் பின்னுக்குத் தள்ளி பிரக்ஞானந்தா முதலிடத்தை பிடித்துள்ளார்.
லைவ் ரேட்டிங் புள்ளிப் பட்டியலின்படி பிரக்ஞானந்தா 2748.3 புள்ளிகளும், விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.
பல ஆண்டுகளாக இந்திய சதுரங்க வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தை விஸ்வநாதன் ஆனந்த் தன்வசம் வைத்திருந்தார்.
இந்நிலையிலேயே தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தா, விஸ்வநாதன் ஆனந்தின் முதல் இடத்தை தன்வசப்புடுத்தியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் 2023ஆம் ஆண்டில் உலகக் கிண்ண இறுதிப் போட்டியை எட்டிய உலகின் இளைய சதுரங்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளதொடு, விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு உலகக் கிண்ண இறுதிப் போட்டியை எட்டிய இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
பிரக்ஞானந்தாவின் வெற்றியை தொடர்ந்து இந்திய பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.