வெசாக் தினத்தை முன்னிட்டு வீதியோரங்களில் வழங்கப்படும் வெசாக் தானங்களில் உள்ள உணவுகள் சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டால் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் அல்லது பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உடனடியாக தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் அதிகளவில் வெசாக் தானங்கள் வழங்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வெசாக் தானங்களை வழங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அது தொடர்பான தகவல்களை அருகில் உள்ள பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.