உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில் இவ்வாண்டு இந்தியாவில் வெப்ப அலை தீவிரமாக வீசியது.
இதனால் கோடைக்காலத்தில் இந்தியா எங்கும் வரலாறு காணாத வெப்பநிலை பதிவானதுடன் வெப்ப அலையின் தாக்கத்தினால் பலர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 இலட்சம் (இந்திய ரூபாய்) நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.