கடந்த மே மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் அனுப்பல்கள் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை,இந்த வருடத்தின் கடந்த மே மாதம் வரையிலான பணம் அனுப்பல்கள் 2,624.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த 2023 ம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது இது 11.8 சதவீத வளர்ச்சி எனவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.