NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெள்ள அபாய எச்சரிக்கை – தண்ணிமுறிப்பு குளத்தில் நீர் வரத்து அதிகரிப்பால் வான் கதவுகள் திறப்பு..!

தண்ணிமுறிப்பு குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதிக நீரை வெளியேற்ற கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற தண்ணிமுறிப்பு குளத்திற்கான நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் தண்ணிமுறிப்பு குளத்தின் வான்கதவுகள் இன்று (26) பிற்பகல் முத்துஐயன் கட்டு நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் திருமதி மஞ்சுளா யொய்ஸ்குமார் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் நேரடியாக குளபகுதிக்கு சென்று பார்வையிட்டதன் பின் திறக்கப்பட்டுள்ளது.

தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருக்கின்ற நிலையில் தற்போது 17″ அடி வரை நீர் மட்டம் உயர்ந்த நிலையிலே வான் கதவுகள்  திறக்கப்பட்டுள்ளன.

எனவே தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் விழிப்புடன் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.  எனவும் தாழ்வான பகுதிகளுக்கும், ஆற்றங்கரைகளுக்கும் செல்ல வேண்டாம் எனவும் அவசியமாயின் உயர்ந்த பகுதிகளுக்கு இடம்பெயரவும். பாதுகாப்பிற்காக அதிகாரிகளின் வழிகாட்டல்களை பின்பற்றவும், தொடர்ந்தும் தகவல்களை பெற்றுக்கொள்வதையும் உறுதி செய்யவும் என முல்லைதீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் குளங்களுள் நான்காவது பெரிய குளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles