NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வைத்தியசாலைக்குள் நுழைந்த சிறுத்தை…!

இந்தியாவின் – மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் நந்துர்பர் மாவட்டத்தில் உள்ள ஆதித்யா மருத்துவமனையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், சிறுத்தையை கண்ட ஊழியர்கள் அது இருந்த அறையை வெளியில் பூட்டி விட்டனர்.

இதனையடுத்து, அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் வைத்தியசாலைக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை மீட்டு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles