இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அந்நாட்டு அரசினால் ‘அா்ஜுனா விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் 82ஆவது கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற தமிழக செஸ் வீராங்கனை ஆா்.வைஷாலிக்கும் அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.
டில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று (09) நடைபெற்ற தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளார்.







