NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஷாபி சிஹாப்தீன், அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை..!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட மகப்பேறு வைத்திய நிபுணர் ஷாபி சிஹாப்தீன், அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக் குவித்தமை, சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த குருநாகல் நீதவான், வழக்குக்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பிரதிவாதியான வைத்தியர் ஷாபியுடன் தொடர்புடைய அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்துள்ளார்.

அத்துடன், வைத்தியர் ஷாபிக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles