NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஸ்பெயின் நாட்டில் வெள்ளப்பெருக்கு – பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட சென்ற மன்னர் மீது சேறு பூசிய மக்கள்

ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் கடந்த வாரம் திடீரென கன மழை பெய்ததால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளப்பெருக்கில் 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் 100இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தநிலையில், வாலென்சியாவில் பைபோர்ட்டோ நகரில் ஸ்பெயின் மன்னர் ஃபிலிப் மற்றும் அவரது மனைவி, ராணி லெட்டிஸியா ஆகியோர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றுள்ளனர்.

பாதுகாலவர்கள் புடை சூழ ராணியுடன் மன்னர் ஃபிலிப் வருவதை பார்த்த மக்கள் ஆத்திரத்தில் அவர்களை எதிர்த்து கோஷமிட்டனர். அவர்களை திரும்பி போகுமாறு முழக்கமிட்டபடியே வீதியில் கிடந்த சேற்றை அள்ளி மன்னர் மீதும் ராணி மீதும் வீசினர். இதனால் மன்னரின் முகம் மற்றும் ஆடைகள் சேறாகியுள்ளது.

இந்த சம்பவம் காணொளியாக வெளியாகி வைரலாகியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles