ஹட்டன் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக, நகர சபை ஊழியர்களினால் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொலித்தீன் குப்பைகளுக்கு மக்களின் குடியிருப்பு பகுதிகளில் தீ வைப்பதால் அங்குள்ள மக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை ஹட்டன் நகரில், பல பகுதிகளிலும் பாரியளவில் பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான உக்காத பொருட்கள் அனைத்தும் நகரசபை முன்வந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அவற்றை தீ வைப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.