ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் தற்போது திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் குறித்த தரிப்பிடம் மூடப்படவுள்ளதாக பஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான பயணிகளின் பொதுவான குறிப்பாக அனைத்து மாவட்டங்கள்- மாகாணங்களுக்கு வந்து செல்லும் அரச – தனியார் பஸ்கள் தரிக்கும் இடமாகவே ஹட்டன் பஸ் தரிப்பிடம் அமைந்துள்ளது.
பஸ் தரிப்பிடும் குண்டும் குழியுமாக இருந்தமையினாலும் தொடர்ச்சியான முறைப்பாடுகளின் விளைவாகவே தற்போது திருத்தப்பணிக்ள ஆரமப்பிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளின் காரணமாக குறித்த பிரதேசங்களுக்குச் செல்லும் பஸ் தரிப்பிடங்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய ஹட்டன் பொகவந்தலாவை-மஸ்கெலியா- ஒஸ்போன் – நோட்டன் – காசல்ரீ-சாஞ்சிமலை- ஓல்டன்-போடைஸ் ஆகிய வீதிககில் செல்லும் பஸ்கள் ஹட்டன் தபால் நிலையம், சுசி ஆடையகம் ஆகிய பகுதிகளல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டனிலிருந்து- கொழும்பு – கண்டி – தலவாக்கலை- வட்டவளை-நாவலப்பிட்டி- நுவரெலியா-உட்பட அப்பகுதியில் செல்லும் தனியார் – அரச பஸ்கள் கார்கில்ஸ் புட் சிட்டி அமைந்துள்ள பகுதிகளில் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.