NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹமாஸ் தலைவரின் இறுதிச் சடங்குகள்.

படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரின் இறுதிச் சடங்குகள் ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தலைமையில் தெஹ்ரானில் நடைபெற்றது.

இஸ்மாயில் ஹனியே ஈரானில் நேற்று புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் அவர் படுகொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்போது அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டார்.இந்த படுகொலை சம்பவத்தின் பின்னர் பிராந்திய பதற்றங்கள் மேலும் அதிகரித்தன.

இந்தப் பதற்றங்களுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அவசர கூட்டத்தை நடத்தியது.கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஆரம்பமான இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தற்போது வரை நீடித்து வருகின்றது.

இந்த மோதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,000 அண்மித்ததுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 90,000 ஐ கடந்தது.

Share:

Related Articles