ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்த போது இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்துடன், காஸாவில் கடந்த மாதம் 21ஆம் திகதி இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
அதற்கமைய, ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் உயிரிழந்தது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் நல்ல நாள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.