NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“ஃபேமிலி படம்”- பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்

யுகே கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில், நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்ஷா நடிக்கும், திரைப்படம் “ஃபேமிலி படம்”. இந்த படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் தொடங்கியது.

ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்க போராடுகிறார்கள். அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அழகான குடும்பத்தின் வாழ்க்கையை எண்டர்டெயினர் படமாக அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன் உருவாக்குகிறார்.

இப்படம் குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் ஜனரஞ்சக படைப்பாக இருக்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில் டைனோசர்ஸ் பட நாயகன் உதய் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக சுபிக்ஷா நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம், ஆர்.ஜே பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிவீ இசையமைக்கிறார். கேபி நந்து கலை இயக்கம் செய்கிறார். ஆர் சுதர்ஷன் எடிட்டிங் செய்கிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles