NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதர்வா பிறந்தநாள் – ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு

கடந்த 2016-ஆம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் ‘மான்ஸ்டர்’, ‘ஃபர்ஹானா’ போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார்.

அதைத்தொடர்ந்து அடுத்ததாக அதர்வா நடிப்பில் டி.என்.ஏ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சித்தா படத்தில் புகழ் பெற்ற நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் தலைப்பு கடந்த ஆண்டு வெளிவந்த நிலையில். தற்பொழுது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதர்வாவின் பிறந்தநாளான இன்று படக்குழுவினர் இந்த போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டி.என்.ஏ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Related Articles