NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமிதாப் பச்சன் குறித்து – நடிகர் பிரபாஸ்

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கல்கி 2898AD ‘. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி, அன்னா பென் உள்பட பலர் நடிக்கின்றனர்.

‘முதன்முறையாக அமிதாப் சாரை சந்தித்தபோது, அவருடைய பாதங்களைத் தொட சென்றேன். அப்போது அவர், ‘அதைச் செய்யாதே, நீங்கள் செய்தால், நானும் அதைச் செய்வேன்’.

என் மாமா ஒருவர் உங்களை போன்று ஹேர் ஸ்டைல் வைத்திருந்தார். நாட்டின் வடக்கு, தெற்கு, தெலுங்கு, தமிழ் என எல்லா இடங்களுக்கு சென்றாலும் அப்போது அமிதாப் சாரின் ஹேர் ஸ்டைல் கொண்ட ஆண்களைப் பார்க்கலாம். எந்த உயரமான நபரையும் அமிதாப் பச்சன் என்றுதான் குறிப்பிடுவார்கள்.

அப்போது உங்கள் படங்களைப் பார்த்துத்தான் நாங்கள் வளர்ந்தோம்.

கமல் சார் நடித்த ‘சாகர சங்கமம்’ படத்தை பார்த்து என் அம்மாவிடம் அதேபோன்று உடை எடுத்து தர சொன்னேன்.

அப்போது என் உறவினர் ஒருவர் அதில் வரும் கமல் சாரை போன்று நடித்துகாட்டினார். தற்போது நான் அவர்களுடன் வேலை செய்கிறேன், இதை என்னால் நம்பமுடியவில்லை’. இவ்வாறு நெகிழ்ச்சியாக கூறினார்.

Share:

Related Articles