NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நிக்சன்

‘Big Boss’ நிகழ்ச்சியின் 7-வது சீசனில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட பிரச்சனைகளில் ஒன்று வினுஷாவை நிக்சன் உருவகேலி செய்த விஷயம்.

Wild Card மூலம் வந்த போட்டியாளர்கள் இந்த விஷயம் பற்றி நிக்சனிடம் பேசினார்கள். நிக்சனும், Big Boss வீட்டில் இருந்து வெளியே சென்ற பிறகு வினுஷாவிடம் மன்னிப்பு கேட்பதாக சொல்லி பிரச்சனையை முடித்தார்.

தற்போது அந்த பிரச்சனை மீண்டும் கிளப்பி விட்டுள்ளார் அர்ச்சனா. நேற்றைய கல்லூரி டாஸ்க்கின் போது நிக்சனுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் அர்ச்சனா, வினுஷா உருவ கேலி விவகாரம் பற்றி பேசியதும் நிக்சன் கடுப்பாகி கத்தினார்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அர்ச்சனாவிடம், வைல்டு கார்டுல எப்படி வந்தியோ அப்படியே வெளிய ஓடு, நான் கலாய்க்க ஆரம்பிச்சா நீ 3 நாளைக்கு உட்கார்ந்து அழுவ என்று நிக்சன் மோசமாக பேசியுள்ளார்.

இதற்கு ரசிகர்கள், நிக்சனின் இந்த மோசமான பேச்சுக்கு கமல் Red Card கொடுப்பாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.   

Share:

Related Articles