NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆதிபுருஷ் படம் எப்படி இருக்கு?

முதல் டீசரிலேயே ‘ஆதிபுருஷ்’ அளவுக்கு வேறு எந்த திரைப்படமும் சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.

அந்த அளவுக்கு கிராபிக்ஸ் அதில் இடம்பெற்றிருந்தது. அதன்பிறகு படக்குழு கூடுதலாக ரூ.100 கோடி செலவு செய்து கிராபிக்ஸ் தரத்தை மேம்படுத்தியதாக கூறப்பட்டது.

ஆனால் படத்தின் அனிமேஷனில் எந்தவொரு முன்னேற்றமும் தெரியவில்லை. ஏறக்குறைய ரூ.500 கோடி பட்ஜெட்டில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் படத்தின் அனிமேஷன் இந்தி சீரியல்களில் வரும் கிராபிக்ஸுக்கு ஒப்பாக இருக்கிறது.

எம் அனைவருக்கும் ராமாயணம் குறித்து தெரியாமல் இருக்க முடியாது. வாய்வழிக் கதைகள், புத்தகங்கள், திரைப்படங்கள் என ஏதோ ஒருவகையில் சிறுவயது முதல் நமக்கு இந்த கதை பரிச்சயமாகியிருக்கும்.

அப்படி சிறப்பு மிகுந்த ஒரு கதைக்களத்தை கையில் எடுத்துக் கொண்ட இயக்குநர் ஓம் ராவத், அதே சிறப்புடன் அதனை திரையில் காட்சிப்படுத்தியுள்ளாரா என்றால் இல்லை என்பதே பதிலாகும்.

தன் மனைவி சீதை ,தம்பி லட்சுமணனுடன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்கிறார் ராமர் .

தங்கை சூர்ப்பனகையின் காதலை ஏற்க மறுத்து அவரது மூக்கை அறுத்த ராமனை பழிவாங்கும் பொருட்டு, முனிவராக மாறுவேடம் பூண்டு சீதையை கடத்திச் சென்றுவிடுகிறார் ராவணன்.

சுக்கிரீவனின் வானரப் படை மற்றும் அனுமனின் உதவியுடன் இலங்கைக்குச் செல்லும் ராமர், சீதையை எப்படி மீட்டார் என்பதே ‘ஆதிபுருஷ்’ படத்தின் கதை.

Share:

Related Articles